பாரிஸ்

பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன தடுப்பூசிகள் சோதனையில் வெற்றி பெற்றுள்ளன.  இதில் பிஃபிசர் மற்றும் ப்யோண்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி உள்ள தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.  இதைத் தொடர்ந்து இந்நிறுவனம் பல நாடுகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன.  இவற்றில் ஒன்றான ஐரோப்பிய ஒன்றியம் இதற்கான முடிவை தெரிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில் ஐரோப்பிய மருந்து ஏஜன்சி பரிந்துரையின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  சமீபமாகப் பிரிட்டனில் பீதியைக் கிளப்பி வரும் புதிய கொரோனாவுக்கு எதிராகச் செயல்படும் எனவும் ஐரோப்பிய மருந்து ஏஜன்சி கூறி உள்ளது.  எனவே வரும் டிசம்பர் 27 முதல் இந்த தடுப்பூசி ஐரோப்பிய நாடுகளில் அளிக்கப்பட உள்ளன.

ஒன்றியத்தின் இந்த முடிவுக்கு ஒன்றிய நாடான ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் வரவேற்பைத் தெரிவித்துள்ளன.க்  இந்த தடுப்பூசிக்கு நிபந்தனையுடன் ஓராண்டுக்கு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.   அனுமதி அளிக்க[பட்ட போதிலும் சோதனை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பலருக்கு இந்த ஊசியால் அலர்ஜி ஏற்பட்டுள்ளட்ய்ஹால் ஊசி செலுத்தப்பட்ட பிறகு 15 நிமிடங்களுக்கு ஊசி செலுத்தப்பட்டவர் கண்காணிக்கப்பட உள்ளார்.