ஸ்லாமாபாத்

ரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஆறு மாதத் தடை விதித்துள்ளதாகப் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்  நிறுவனம் அந்நாட்டின் அரசு விமானச் சேவை நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தில் பணி புரியும் 262 விமான ஓட்டிகளின் உரிமம் சந்தேகத்துக்கு உரியவை என அந்நாட்டு அமைச்சகம் அறிவித்தது.

இது உலகெங்கும் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையொட்டி ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் ஆறு மாதங்களுக்குத் தடை  விதித்துள்ளது.

இந்த முடிவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை தெரிவித்த பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் இதையொட்டி ஐரோப்பா செல்லும் இந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகக் கூறி உள்ளார்.