ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் தற்போது பிரான்ஸ் நாட்டில் நடை பெற்றுகொண்டிருகிறது. கால்பந்தில் உலக கோப்பை போட்டிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கவருவது ஐரோப்பிய (யூரோ) கோப்பை போட்டியாகும். ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகள் மட்டும் பங்கேற்கும் இந்த போட்டி 1960–ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 15–வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் வெள்ளிக்கிழமை முதல் ஜூலை 10–ந் தேதி வரை 31 நாட்கள் நடக்கிறது. அங்குள்ள 10 நகரங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. 24 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டித்தொடரில் 6 பிரிவாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது லீகு போட்டிகள் நடைபெறுகிறது. இன்று வரை நடைபெற்ற போட்டிகள் சுருகமாக.
பிரான்ஸ் – ரோமானியா: ஐரோப்பிய கால்பந்து முதல் போட்டி பிரான்ஸ் – ரோமானியா மோதின. 2 முறை சாம்பியனான பிரான்ஸ் 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் வெற்றி பெற்று பிரான்ச் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
அல்பேனிய – ஸ்விட்சர்லாந்து: ஸ்விட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் லூகாஸ் ஸ்கார் 5-ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
வேல்ஸ் – சுலோவாக்கியா: சுலோவாக்கியாவுக்கு ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் போட்டிக்கான பிரவேசம் என்பது வரலாற்றுபூர்வ நிகழ்வாகும். காரணம், சுதந்திரம் பெற்ற பின்னர், சுதந்திர நாடாக முதன் முறையாக சுலோவாக்கியா இந்த போட்டிகளில் பங்கு பெறுகின்றது. ஆனால் இந்த போட்டில் வேல்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வி பெற்றது.
இங்கிலாந் – ரஷ்யா: ரஷியா-இங்கிலாந்து இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவானது. ரஷியா-இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தின்போது இரு நாட்டு ரசிகர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் 35-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் காயமடைந்தனர். ரசிகர்களின் அடாவடியால் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு கடும் கோபம் அடைந்துள்ளது. இது தொடர்பாக நேற்று அவசர ஆலோசனை நடத்திய அந்த அமைப்பு, ‘‘ரசிகர்களின் வன்முறை நீடித்தால் இங்கிலாந்து, ரஷிய அணிகளை ஐரோப்பிய கால்பந்து தொடரில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நேரிடும்’’ என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
துர்கி – குரேஷிய: குரேஷிய அணி 1-0 என்ற கோல் கணக்கில் துருக்கி அணியைத் தோற்கடித்தது. குரேஷியாவின் மோட்ரிச் 41-ஆவது நிமிடத்தில் கோலடித்தார்.
போலந்து – வடக்கு அயர்லாந்: போலந்து 1-0 என்ற கோல் கணக்கில் வடக்கு அயர்லாந்தை வீழ்த்தியது. மிலிக் 51–வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார்.
ஜெர்மனி – உக்ரைன்: ‘சி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஜெர்மனி-உக்ரைன் அணிகள் மோதின. ஜெர்மனியின் அபாரமான தாக்குதல் ஆட்டத்துக்கு உக்ரைன் வீரர்களால் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.