மும்பை
ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விற்பனை செய்ய உள்ளது.
இந்திய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இந்தியா லிமிடெட் தற்போது கடன் சுமை அதிகரித்ததால் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. சுமார் 119 விமானங்களுடன் இயங்கி வந்த இந்த நிறுவனத்திடம் தற்போது 41 விமானங்கள்மட்டுமே உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்துக்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என வங்கிகளுக்கு அரசு சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24% பங்குகள் அரபு நாட்டு விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் வைத்துள்ளது. தற்போது ஜெட் ஏர்வேஸ் மிகவும் கடினமான சூழ்நிலையில் உள்ளதால் ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கவும் நிதி நிலை இல்லாமல் உள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் சிலர் வேலை நிறுத்தம் செய்ய உளதாக அறிவித்துள்ளனர்.
இதை ஒட்டி விமானப் பயணத் துறை அமைச்சகம் ஏர்லைன்ஸ் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தியது. எந்த ஒரு விமான சேவையையும் கடைசி நேரத்தில் நிறுத்தி பயணிகளை அசௌகரியத்தில் ஆழ்த்தக் கூடாது என நிறுவனத்திடம் கூறப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்கு தாரரான எதிஹாட் நிறுவனமும் இந்நிலையில் உதவ முன் வந்துள்ளது.
எதிஹாட் ஏர்வேஸ் தலைமை அதிகாரி டோனி டக்ளஸ் நேற்று முன் தினம் ஸ்டேட் வங்கி தலைவர் ரஜனிஷ் குமாருடன் இது குறித்து பேச்சு வார்த்தை நடத்திஉளார். அப்போது டோனி டங்களிடம் உள்ள ஜெட் ஏர்வேஸ் பங்குகளை ஸ்டேட் வங்கிக்கு விற்பனை செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். அவர்களிடம் உள்ள 24% பங்குகளை ரூ. 150 வீதம் ரூ. 400 கோடிக்கு விற்க அவர் விருப்பம் தெரிவித்துளார்
இது குறித்து ஸ்டேட் வங்கி எந்த ஒரு முடிவும் இதுவரை அறிவிக்கவில்லை. பெயர் தெரிவிக்க விரும்பாத வங்கியின் மேலாளர் ஒருவர், “ஸ்டேட் வங்கி நிறுவனத்தின் 50.1% பங்குகளை வாங்கி நிறுவனத்தை தனது மேற்பார்வையில் நடத்தும் எண்ணத்த்தில் உள்ளது. ஆகவே இது குறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துடன் விவாதிக்க உள்ளது” என தெரிவித்துள்ளார்.