ஸ்டாக்ஹோம்:

ந்த ஆண்டு அமைதிக்கான  நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. எத்தியோப்பிய பிரதம மந்திரி அபி அகமது அலிக்கு அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை அடைவதற்கான முயற்சிகளுக்காக வழங்கப்பட்டு உள்ளது.

சுவீடன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் நோபல் என்ற தொழில் அதிபரின் நினைவாக  ஆண்டுதோறும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு காங்கோ நாட்டை சேர்ந்த மகளிர் நல மருத்துவர் டெனிஸ் முக்வேஜ்,  நாடியா முராத் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 2019ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்டை நாடான எரித்திரியாவுடனான எல்லை மோதலைத் தீர்ப்பதற்கான  அவர் எடுத்த தீர்க்க முயற்சிகள், சர்வதேச நாடுகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக   எத்தியோப்பிய பிரதம மந்திரி அபி அகமது அலிக்கு அமைதிக்கான நோபர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]