லக்னோ:

உ.பி.யில் தனியார் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவர்களை உடடினயாக அருகிலுள்ள மருத்துவமனையில் பள்ளி நிர்வாகம் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறது.

விசாரணையில் மாணவ மாணவிகள் சாப்பிட்ட உணவில் விஷம் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலம் ஈட்டா-வின் கஸ்தூரி பாய் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வழக்கம் போல் இன்று மதிய உணவு சாப்பிட்டனர். இவர்களில் சிலருக்கு வயிறு உபாதை ஏற்பட்டதாகவும், ஒருசிலர் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக அந்த உணவை சாப்பிட்ட 40 மாண மாணவிகளுக்கும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர்கள் உண்ட உணவில் நச்சுத்த கலந்திருப்பதாக கூறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.