டில்லி

ரோப்பா கண்டத்தில் உள்ள சிறு நாடான எஸ்டோனியாவில் வாக்குப் பதிவு ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது

உலகநாடுகளில் இணைய தள பயன்பாடு பெரிதும் அதிகரித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. பல வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் இணையம் மூலம் அரசு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

ஐரோப்பாவில் உள்ள ஒரு மிகச்சிறிய நாடு எஸ்டோனியா. இந்த நாட்டின் பெயரையும் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். செய்தித் தாளில் இடம்பெறாத நாடுகளில் ஒன்றாக இருந்த இந்நாடு இப்போது உலகப் புகழ் அடைந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம்சமீபத்தில் நடந்த இந்நாட்டின் பாராளுமன்ற தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் 44% வாக்குகள் ஆன்லைன் மூலம் பதிவாகி உள்ளன. இதில் வெற்றி பெற்ற கட்சி ஆன்லைனில் 40% வாக்குகள் பெற்றது. இது அந்நாட்டில் பதிவான மொத்த வாக்குகளில் 30% ஆகும்.

அனைத்து வயதினருக்கும் ஆன்லைன் மூலம் வாக்களிக்க உரிமை அளிக்கப்பட்டிருந்தது.  ஆன்லைன் மூலம் வாக்களித்தவர்களில் 25% பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவார்கள். அத்துடன் ஆன்லைனில் 20% வாக்குகள் 45 முதல் 54 வயதான வாக்காளார்கள் வாக்களித்துள்ளனர். இதற்காக அந்நாடு ஒரு சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.

அந்த விதிமுறைகள் பின் வருமாறு

* எஸ்டோனியா மக்கள் அனைவரும் வாக்களிப்பு தேதிக்கு ஒரு வாரம் முன்பிருந்தே ஆன்லைனில் வாக்களிக்கலாம். வாக்களிப்பு தேதி அன்று ஆன்லைனில் வாக்களிக்க முடியாது.
*வாக்காளர்களிடம் இணைய வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர், தேசிய அடையாள அட்டை அல்லது சிறப்பு மொபைல் அடையாள அட்டை இருக்க வேண்டும்.
* தேசிய தேர்தல் இணையத்தில் இருந்து வாக்காளர்கள் வாக்களிப்பு விண்ணப்பத்தை ட்வுன்லோடு செய்ய வேண்டும்.
* அதன் பிறகு அடையாளம் சரிபார்க்கப்பட்டு டிஜிடல் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிக்க வேண்டும்
* வாக்குப் பதிவை வாக்காளர்கள் மொபைல் மூலம் உறுதி செய்துக் கொள்ளலாம்.