கோவை: ஈரோடு – பாலக்காடு டவுன் – ஈரோடு மெமு ரயில் 29.7.22 முதல் தினசரி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ரயில், விமானம், பேருந்து உள்பட பல்வேறு போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் ரயிலும் நிறுத்தப்பட்டன. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எக்ஸ்பிரஸ்,உள்ளூர் பயணிகள் உட்பட பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. இதில் ஈரோடு-கோவை மற்றும் ஈரோடு-பாலக்காடு, சேலம்-கோவை வரை இயக்கப்பட்ட MEMU (Mainline Electric Multiple Unit) ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
ஆனால், கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து, இயல்பு வாழ்க்கை திரும்பிய நிலையில், அனைத்து போக்குவரத்துக்களும் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுபோல, ஈரோடு பாலக்காடு ரயிலையும் உனே இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த இரு ரயில்களை நம்பி குறைந்த கட்டணத்தில் தினமும் திருப்பூர் கோவைக்கு பணிகளுக்காக சென்று வந்த சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிப்படைந்தனர். மேலும் இந்த ரயில்களை இயக்ககோரி இரயில்வே அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, நாளை முதல் (28/06/2022 ஈரோடு கோவை இடையே மீண்டும் MEMU ரயில் சேவையை துவங்க உள்ளதாக தென்னக ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது. இந்த பயணிகள் ரயில் நாளை முதல் தினந்தோறும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29/07/2022 முதல் ஈரோட்டில் இருந்து கோவைக்கு காலை 7.15 மணிக்கும் புறப்பட்டு காலை11.45மணிக்கு பாலக்காடு டவுன் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 02.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 7.10மணிக்கு ஈரோடு வந்தடைகிறது. காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் இருந்து கிளம்பும் ரயில் (06801) கோவைக்கு 9.45 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் திருப்பூருக்கு 8.15 மணிக்கு செல்லும். வழியில் உள்ள தொட்டிபாளையம், பெருந்துறை ஈங்கூர் விஜயமங்கலம் ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.இதே போல் மறு மார்க்கத்தில் கோவையில் மாலை 6.40 க்கு கிளம்பும் ரயில்(06800) இரவு 9.15 க்கு ஈரோடு வந்தடையும்.