சென்னை: தமிழ்நாடு அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய திருமகன் ஈவெரா உடல்நலக்குறைவால் கடந்த ஜனவரி மாதம் 4ந்தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்l பிப்ரவரி 27ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான 7 வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து பரபரப்பாக பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 4 பெண் வேட்பாளர்கள் அடங்குவார்கள். இதில் காங்கிரஸ் அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. பிப்ரவரி 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மார்ச் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியாகும்.
இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வகை செய்யும் வகையில் தமிழக அரசு பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் அங்குள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.