சென்னை: இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டி யிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஏற்கனவே ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், அங்கு பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதன்படி, வரும் 19ம் தேதி மநீம தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்ய இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மநீம கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகியும், இதுவரை மக்கள் மனதில் இடம்பிடிக்காத நிலையில், 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து, அங்கீகாரத்தை பெற முனைந்து வருகிறது. இதற்கு முன்னோடியாக, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆசதரவு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் இணைந்து பாரத் ஜோடோயாத்திரை உள்பட பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு, தன்னை முன்னிலைப்படுத்தி வரும் கமல்ஹாசன் இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு ஆதரவு வழங்கி உள்ளது.
கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது, இநத் தொகுதியில் தனித்து போட்டியிட்ட மநீம கட்சி 10ஆயிரம் வாக்குகளை பெற்ற நிலையில், தற்போது தேர்தலில் போட்டியிட்டாமல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து காய் நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறும் வகையில் அக்கட்சியின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தனித்து போட்டியிட்டு மக்கள் மத்தியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்கு சதவீதத்தை பெற்றிருக்கும் கமல்ஹாசனின் கவனம் கூட்டணி அரசியலை நோக்கி நகர்ந்து உள்ளது. இதை தொடர்ந்தே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு அவர் ஆதரவு தெரிவித்து உள்ளார்.