ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு  கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து பட்டியல் விவரம்  வெளியாகி யுள்ளது.

 

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது.  இங்கு மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர். இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக,, நாம் தமிழர், தேமுதிக இடையேதான் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானார், அதிமுக காங்கிரஸ் இடையேதான் நேரடி போட்டியாக இருக்கிறது. தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் நேற்று  பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் வெளியிட்டார்.

திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பளார் மேனகா, தேமுதிக வேட்பளார் ஆனந்த் மற்றும் சில உதிரி கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் சொத்து பட்டியல் விவரம் 

காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

சொத்து மதிப்பு – ரூ.3.50 கோடி
இளங்கோவனின் மனைவி – ரூ.7.16 கோடி
குடும்ப சொத்து – ரூ.7.16 கோடி.
இளங்கோவனின் கடன் மதிப்பு -ரூ. 1.29 கோடி
இளங்கோவனின் மனைவி பெயரில் உள்ள கடன் மதிப்பு – ரூ.1.71 கோடி.
குடும்ப கடன்- ரூ.47.55 லட்சம்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு

சொத்து மதிப்பு-ரூ. 2.27 கோடி
அவரது மனைவி சொத்து மதிப்பு – ரூ.1.78 கோடி.
கடன் மதிப்பு ஏதுமில்லை..

தேமுதிக வேட்பாளர் ஆனந்த்

சொத்து மதிப்பு – ரூ.14.74 லட்சம்..
வங்கி கடன் – ரூ.2 லட்சம்.

நாம் தமிழர் வேட்பாளர் மேனகா

சொத்து மதிப்பு – ரூ.9.7 லட்சம்.
மேனகாவின் கணவர் சொத்து மதிப்பு – ரூ.2.69 லட்சம்.
கடன் மதிப்பு ( மேனகா ) – ரூ.4.8 லட்சம்.
மேனாக கணவரின் கடன் மதிப்பு – ரூ.3.53 லட்சம் .