சென்னை:
கட்அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் ! இது போன்ற உயிர் சேதத்தை தடுக்க அனைத்து அரசியல் கட்சியினரும் உறுதி ஏற்க வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வாழப்பாடி இராம சுகந்தன் அரசியல் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க சென்னை உயர்நீதி மன்றம் பல்வேறு உத்தரவுகளையும், விதிகளையும் பிறப்பித்தும், தமிழகஅரசும், சென்னை மாநகராட்சியும் அதை அலட்சியப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஃபிளெக்ஸ் மற்றும் பேனர்கள் காரணமாக ஏற்படும் உயிர்ப்பலிகளும் அதிகரித்து வருகிறது.
நேற்று சென்னையில் கனடாவுக்கு செல்லும் கனவில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய சுபஶ்ரீ என்ற இளம்பெண், சென்னை பள்ளிக்கரணை அருகே அதிமுக நிர்வாகி ஒருவர் திருமண நிகழ்ச்சிக்காக சாலையின் நடுவே வைத்திருந்த பேனர் சரிந்து மேலே விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர், நிலைதடுமாறி, சாலையில் விழ, பின்னால் வேகமாக வந்த வந்த லாரி அவர்மீது ஏறி, பரிதாபமாக உயிரிழந்தார்.
இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இனிமேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் வாழப்பாடி இராம சுகந்தன் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,
கட்அவுட் மற்றும் பேனர் கலாச்சாரத்தை ஒழிப்போம் ! இது போன்ற உயிர் சேதத்தை தடுக்க அனைத்து அரசியல் கட்சியினரும் உறுதி ஏற்க வேண்டும் ! என்று அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில், இளம் பெண்ணின் சாவிற்கு காரணமாக இருந்த லாரி டிரைவரை கைது செய்து ஆகிவிட்டது பேனர் அடித்து கொடுத்த அச்சகத்தை சீழ் வைத்து மூடி ஆகிவிட்டது! உண்மையான குற்றவாளியை என்ன செய்யப் போகிறார்கள் அடிமை என்று கேள்வி எழுப்பி உள்ளவர்,
முட்டாள்தனமான செயலை இந்த அடிமை அரசாங்கம் செய்கிறது ! உண்மையான குற்றவாளியை கைது செய்து இளம்பெண்ணின் சாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.