டெல்லி:

“சுயசார்பு பாரதம்: ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்ளை அறிவித்த மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் அடுத்த 3 மாதங்களுக்கான தொழிலாளர்களின் பிஎஃப் சந்தாவை அரசே செலுத்தும் என்றும், அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார். 


ஊழியர்கள் வீடுகளுக்கு கூடுதலாக சம்பளத்தை எடுத்துச்செல்லும் வகையில், அவர்களின் பிஎஃப் சந்தாவை அரசு செலுத்தும். அதன்படி,  ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பி.எஃப் சந்தாவை அரசே செலுத்தும் என்று கூறியவர், இதனால் நாடு முழுவதும் சுமார்  67 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும் என்றார்.
இதற்காக மத்திய அரசு   6,500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதனால் நாடு முழுவதும் 77.22 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர் என்றார்.
அடுத்த காலாண்டில் பி.எஃப் தொகையை நிறுவனங்கள், தொழிலாளர்கள் 10 சதவீதம் செலுத்தினால் போதும்.
இவ்வாறு  அவர் கூறினார்.

[youtube-feed feed=1]