சிதம்பரம்
அதிமுக கூட்டணியில் சேர விசிக ம்மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தில் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளை எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.
நேற்று சிதம்பரம் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்தபோது
“விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்த அனுமதி அளிக்கப்படுவதில்லை. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள். விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள், அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது;”
எனத்ட் ஹெரிவித்துள்ளார்