பாக்டீரியாவின் செல் வளர்ச்சியை தடுக்கும் நொதி கண்டுபிடிப்பானது. நோய்எதிர்ப்பு மருந்து மற்றும் நுண்ணுயிரிகள் உலகில் பல பல புதிய வழியை உருவாக்கியுள்ளது
ஹைதராபாத்தில் உள்ள செல்லூலார் மற்றும் மாலிகுலர் பையாலஜி(CCMB) மையத்தின் விஞ்ஞானிகள் இந்த நொதியை கண்டறிந்துள்ளது. பாக்டீரியாவின் செல் சுவர்களின் வளர்ச்சி யையும் இந்த நொதியானது தடுத்து நிறுத்தும், இந்த நொதியை கொண்டு ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு மருந்துகளின் வழியே பாக்டீரியாக்களின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தவும் உதவுகிறது.
இந்த கண்டுபிடிப்பு ஒரு புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை உருவாக்கும் சாத்தியத்தையும் கொண்டுள்ளது,
நோய்எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிராக சில பாக்டீரிய எதிர்ப்பு நிலையை அடைகின்றன , இவ்வாறு நோய் எதிர்ப்பு மருந்துகளுக்கு எதிராக வலுபெறும் பாக்டீரியாக்கள் சூப்பர் பக்ஸ் எனப்படுகின்றன. இது போன்ற பாக்டீரியா க்களை அதன் நோய் எதிர்ப்பு காரணமாக கொல்ல கடினமாக உள்ளதால் இவைகள் இறக்காமல் நம் உடலில் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஆனால் CMB விஞ்ஞானிகள், பாக்டீரியா செல் சுவர் தொகுப்பு நொதிகள் மூலம் தடுக்க முடியும் ஒரு வழித்தடத்தை கண்டறிந்தது. “நோய்எதிரப்பு ஆண்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் என்சைம்களை தடை செய்தால், செல் சுவர் தொகுப்பு நின்று, பாக்டீரியா வளராது. இந்த கண்டுபிடிப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் மற்றும் புதிய வகை ஆன்டிபயாடிக் மருந்துகளை சாத்தியமான வளர்ச்சிக்கு முக்கியமானதாகும் ‘ ‘ என்கிறார் CCMB இயக்குனர் டாக்டர் ராகேஷ் மிஸ்ரா.
-செல்வமுரளி