சென்னை: கிழக்கு கடற்கரை பகுதியான சென்னை முட்டுக்காடு பகுதியில் அமையவுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசு, 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.525 கோடி செலவில் ஈசிஆர் பகுதியான முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், அதற்கான ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத்தொடர்ந்து, இந்த பன்னாட்டு அரங்கம் அமைக்கப்பட உள்ள இந்த அரங்கத்தினற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரப்பட்டது. அதற்கு தற்போது சுற்றுசூழல் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த திட்டம் குறித்து ஆய்வு செய்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அதற்கான அனுமதி வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அரங்கம் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த பணிகள் முடிவடைந்து, கலைஞர் பன்னாட்டு அரங்க்ம் 2025ம் ஆண்டின் இறுதி அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.
[youtube-feed feed=1]ஈசிஆரில் உள்ள ஆளவந்தார் நிலத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கமா? பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு…