enthiran-poster-main
எந்திரன் 2 பாயிண்ட் ஓ போஸ்டர்

தலைப்பை பார்த்ததும் நீங்கள் எப்படி ஆச்சரியம் அடைந்தீர்களோ அதேபோல் தான் சினிமா பிரபலங்கள் அனைவரும் இந்த செய்தியை படித்ததும் ஆச்சரியம் அடைவார்கள்.
அட ஆமாங்க ரஜினியின் நடிப்பில் பிரம்மான்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படம் தான் “எந்திரன் 2 பாயிண்ட் ஓ” திரைப்படம், இத்திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை வருகின்ற 20ஆம் தேதி (20/11/2016) அன்று மும்பையில் யாஸ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவில் வெளியிடவுள்ளனர். இந்த விழாவுக்கு மட்டும் கிட்டத்தட்ட 5 கோடி செலவில் இந்த விழாவை நடத்தவுள்ளார்களாம்.
433912-karan-2
கரண் ஜோகர்

அது மட்டுமல்லாமல் இந்த விழாவை தொகுத்து வழங்க இந்தி திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோகர் தொகுத்து வழங்கவுள்ளார். இந்த விழாவில் ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரகுமான், ஏமி ஜாக்சன் உட்பட இத்திரைப்படத்தில் பணிபுரிந்த அனைவரும் கலந்துக் கொள்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் சுவாரசியமான தகவல் என்னவென்றால் இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படமாம் இது, கிட்டத்தட்ட 360கோடி செலவில் இந்த திரைப்படம் தயாராகியுள்ளதாம். இத்திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை 3டியில் திரையிடவுள்ளார்களாம்.
லைக்கா நிறுவனம்
லைக்கா நிறுவனம்

லைக்கா நிறுவனத்தின் மீது ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருப்பார்கள், காரணம் இந்த விழாவை சென்னையில் நடத்தாமல் மும்பையில் நடத்துவதுதான்
இதை பற்றி விசாரித்த போது கிடைத்த தகவல் :-
இந்த விழாவை மும்பையில் நடத்த காரணம் நேஷ்ணல் மீடியாக்களை கவரத்தானாம் அது மட்டுமல்ல இது வெறும் தொடக்கம் தான் இனி வரும் மாதங்களில் தொடர்ந்து டீசர், டிரைலர், பாடல் வெளியீடு என எல்லா விழாக்களையும் சென்னையில் நடத்தவுள்ளார்களாம்.
கேக்கும் போதே தலை சுத்துதே…. ம்ம்ம்ம்ம்ம்……..

[youtube-feed feed=1]