சென்னை: “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த இரு ஆண்டுகளுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருது வழங்கி கவுரவித்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்மாதிரி கிராம விருதுகள் -ஆறு கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.15 இலட்சம் மற்றும் கேடயம் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன்படி, 2021-22, 2022-23ம் ஆண்டுக்கான சுகாதார முன்மாதிரி கிராம விருதுகள் வழங்கப்பட்டது.. விருதிற்கு தேர்வான 6 ஊராட்சிகளுக்கு தலா 15 லட்சம் பரிசு, கேடயம் ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேல்மருவத்தூர், குளூர், நிபஞ்சம்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம், அரியனேந்தல் ஊராட்சிகளுக்கு விருது வழங்கப்பட்டது. மாநில அளவில் சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான கிராம விருது ஊரக வளர்ச்சி துறை சார்பில் வழங்கப்படுகிறது.
முன்மாதிரி கிராம விருதிற்கு தேர்தெடுக்கப்பட்ட ஊராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பரிசு தொகையுடன் கேடயமும் வழங்கியுள்ளார். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2021-2022 மற்றும் 2022-2023ம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுகளுக்கான முன்பமாதிரி கிராமத்திற்கு விருதுகள் வழங்கப்பட்டிருக்கிறது.
இதில் பல்வேறு துறையில் கிராமத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ஊராட்சிகளில் 6 ஊராட்சிகளை தேர்வு செய்து இந்த விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். குறிப்பாக குளூர், பஞ்சம்பட்டி, நட்டாத்தி, நாயக்கன்பாளையம், மேல்மருவத்தூர் மற்றும் அறியனேந்தல் உள்ளிட்ட 6 கிராம ஊராட்சியில் சிறப்பாக மருத்துவத்துறையில் கொண்டு சட்ட அமைப்பை உருவாக்கியதற்காக இந்த விருது வழக்கப்பட்டுள்ளது.
ரூ.15 லட்சம் மதிப்பிலான பரிசு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். சிறந்து விளங்கிய ஊராட்சியில் ஆண்டு தோறும் சிறப்பாக பணி செய்து கட்டமைப்பு உருவாக்கிய கௌரவம் கொடுப்பது தமிழக அரசிற்கு வழக்கம், அதே போல இந்தாண்டும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
அதைத்தொடர்ந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் மூலம் பயன்பெற்ற குழந்தைகளின் பெற்றோர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அக்குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தறிந்தார்.