சென்னை: இன்றும் நாளையும் பெய்யும் சென்ரனை மக்கள் மழையை கண்டு மகிழுங்கள் – குளிர்ச்சியான இரவுகளள் – சென்னையை நெருங்கிய மேகக்கூட்டத்தால், இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவுகளில் ஒன்றைக் கொடுத்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை குறித்த புதுப்பிப்பு என முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள வெதர்மேன், இன்று (18) மற்றும் நாளை (19 ஆம் தேதிகள) KTCC (சென்னை) இல் மழைக்கு சிறந்த நாள். சென்னை கடற்கரையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் சூழ்ந்துள்ளதால், அடுத்த 1-2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யத் தொடங்கும் என குறிப்பிட்டு உள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்களில் நேற்றே கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. ஆனால் சொல்லும் அளவுக்கு பெரிய மழை இல்லை. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றுமு செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை குறித்து அலர்ட் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், இன்றும் நாளையும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் “குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி KTCC கடற்கரைக்கு அருகில் வந்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மற்றும் குறிப்பாக சென்னைக்கு குளிர்ந்த இரவுகளில் ஒன்றாக இருந்தது., இன்று ஈரப்பதம் உள்நோக்கி நகர்ந்து சிறிது வெப்பத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது, ஆனால் மழை மேகங்களின் பெரும்பகுதி இன்னும் கடலில் உள்ளது.
KTCC மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை பெய்யவுள்ளது. குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று அடுத்த சில மணிநேரங்களில் மிதமான மழை வட சென்னையிலிருந்து தொடங்கி அதன்பிறகு நகரின் பிற பகுதிகளில் பெய்யும்.
அலுவலகம் செல்வோர் மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு தவறாமல் செல்லலாம். இதுவே கடைசி மழையாக இருக்குமா? இல்லை. கிறிஸ்துமஸுக்குப் பிறகு கிழக்கு அலை காரணமாக 26, 27 தேதிகளில் மிதமான மழை பெய்யும். ஆனால் இன்றும் நாளையும் சென்னைக்கு கடைசியாக கிடைக்கும் நல்ல வாய்ப்பு. இந்த மழையால் அச்சப்பட வேண்டாம்.
மற்ற மாவட்டங்களான டெல்டா, விழுப்புரம் கடலோர பகுதிகள், புதுச்சேரி கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. தென் தமிழகத்தில் கன்னியாகுமரியில் மட்டும் ஓரளவு Pull Effect மழை பெய்யும். பொதுவாக இந்த மழை KTCC க்கு மட்டுமே இருக்கும், ராணிப்பேட்டையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது”..
இவ்வாறு தெரிவித்துள்ளார்.