டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விமான நிலையங்கள் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டு உள்ளது.
விமான நிலையங்களில் கோவிட்-19 தொற்று நெறிமுறைகளுக்கான கண்காணிப்பை மேம்படுத்த வேண்டும் அனைத்து விமான நிலைய ஆபரேட்டர்களையும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அது தொடர்பாக இன்று சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில், சில விமான நிலையங்களின் கண்காணிப்பு திருப்திகரமாக இல்லை என்பதை விமான போக்குவரத்து இயக்குநரகம் உ கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, அனைத்து விமான நிலைய ஆபரேட்டர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிப்படுத்த கோரப்படுகிறது.
விமானதில் பயணம் செய்யும் பணிகள், விமான நிலையம் வருவோர் என அனைவரும், ஃபேஸ் மாஸ்க் அணிவதை உறுதி செய்யவும், சமுக இடைவெளியை கடைபிடிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும், துல்லியாக கோவிட் -19 நெறிமுறை குறித்த வழிமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
விதிகளை மீறுவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், உடனடி அபாராதம் வசூலிப்பது போன்றவற்றை தீவிரப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.