இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் தடித்த வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டனர்.
KOHLI 👑 VS ANDERSON 🔥
Clear audio & transcript #ViratKohli #JamesAnderson@imVkohli pic.twitter.com/ns3lAaR7SX— Sushant Mehta (@SushantNMehta) August 18, 2021
மைதானத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்ட இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் “நான் 2012 ம் ஆண்டிலேயே பார்த்துவிட்டேன், விராட் கோலி வாயைத் திறந்தாலே கெட்ட வார்த்தை ஆறாக ஓடும்” என்று பதிவிட்டிருந்தார்.
அவரின் இந்த ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து தனது டிவீட்டை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கி இருக்கிறார்.