கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 269 ரன்களை எடுக்க, தென்னாப்பிரிக்கா எடுத்ததோ 223 ரன்கள் மட்டுமே. பின்னர், தனது இரண்டாவது இன்னிங்ஸை 46 ரன்கள் முன்னிலையுடன் துவங்கிய இங்கிலாநது, 8 விக்கெட்டுகளை இழந்து 391 ரன்களை அடித்து டிக்ளேர் செய்து, தென்னாப்பிரிக்க அணிக்கு 438 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

சவாலான இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில், துவக்க வீரர் மாலன் 84 ரன்கள் அடித்தார். டி காக் 50 ரன்கள் அடித்தார். அந்த அணியில் வேறுயாரும் அரைசதம் அடிக்கவில்லை. எல்கர் அடித்த 34 ரன்கள்தான் மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர்.

இறுதியில் 248 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரண்டர் ஆகி, இங்கிலாந்திற்கு 189 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியைக் கொடுத்தது தென்னாப்பிரிக்கா.

இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும், டென்லி மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், தற்போது 1-1 என்ற எண்ணிக்கையில் சமநிலையில் உள்ளது.