அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இங்கிலாந்து!

Must read

செளத்தாம்டன்: அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடான இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அயர்லாந்து அணி தோல்வியடைந்தது.

இந்நிலையில், இரண்டாவது போட்டி துவங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வுசெய்தது அயர்லாந்து அணி. இதன்படி, மொத்தம் 50 ஓவர்கள் ஆடிய அந்த அணி 9 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை அடித்தது.

பின்னர், சாதாரண இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 32.3 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்து வென்றதுடன், ‍ஒருநாள் தொடரையும் வென்றது.

More articles

Latest article