லண்டன்: இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடும் 16 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி-20 தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக இயான் மோர்கன் அறிவிக்கப்பட்டுள்ளார். வரும் 26ம் தேதி இங்கிலாந்து வீரர்கள் அமகதாபாத் புறப்பட்டுச் செல்கின்றனர்.

சென்னையில் இரு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது இங்கிலாந்து அணி. 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கின்றன. அந்த டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் அகமதாபாத்திலேயே ஐந்து டி-20 போட்டிகளும் நடக்கின்றன.

இங்கிலாந்து டி-20 அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மோர்கன் என வலிமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் கலக்கிய லிவிங்ஸ்டோன் முதல்முறையாக டி-20 போட்டியில் அறிமுகமாகியுள்ளார்.

அணி விபரம்:

இயான் மோர்கன்(கேப்டன்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனத்தன் பேர்ஸ்டோ, சாம் கரன், ஜோஸ் பட்லர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், ஆதில் ரஷித், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்ளி, மார்க் உட், சாம் பில்லிங்ஸ்.