சென்னை: ஐபிஎல்2021 வீரர்களுக்கான  ஏலம் சென்னையில்  வரும் 18-ஆம் தேதி  நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்துளளது. அவர்களுக்கு குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் வரும் 18ந்தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

மொத்தம் 1,097 வீரர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களில் இருந்து 292 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏலத்துக்கு அறிவிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 164 பேர் இந்தியர்கள்.

ஏலத்துக்கு தேர்வாகி உள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில், 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களில்,  ஷாருக்கான், எம். சித்தார்த், ஹரி நிஷாந்த் உள்ளிட்ட பல தமிழக வீரர்கள் தேர்வாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு (2020 ஐபிஎல்)  போட்டியில் 11 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். அவர்களில் முரளி விஜய்யும் எம். சித்தார்த்தும் ஏற்கனவே இடம்பெற்றிருந்த அணியில் மீண்டும் இடம்பெறவில்லை.  இதனால் அவர்கள் மீண்டும ஏலத்தில் கலந்துகொள்ள விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், சித்தார்த் மட்டும 2021 ஐபிஎல் ஏலத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். முரளி விஜய்யின் பெயரும் இடம்பெறவில்லை.

2021 ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்களின் குறைந்தபட்ச விலையாக ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஷாருக் கான் – ரூ. 20 லட்சம், எம். சித்தார்த் -விலையும் ரூ. 20 லட்சம், ஹரி நிஷாந்த் விலை  ரூ. 20 லட்சம், சோனு யாதவ் – ரூ. 20 லட்சம், அருண் கார்த்திக் – ரூ. 20 லட்சம், ஜி. பெரியசாமி – ரூ. 20 லட்சம், பாபா அபராஜித் – ரூ. 20 லட்சம். எம். முகமது – ரூ. 20 லட்சம் .

2021 ஐபிஎல் போட்டிக்காக, ஏற்கனவே இடம்பெற்றிருந்த அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ள  தமிழக வீரர்களில்,

பஞ்சாப் அணியின் கேப்டனாக உள்ள  ஆர். அஸ்வின்  ரூ. 7.60 கோடி,

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் ரூ. 7.40 கோடி,

ஐதராபாத் அணியில் இடம்பிடித்துள்ள  விஜய் சங்கர் – ரூ. 3.20 கோடி

பெங்களூரு அணியில் இடம் பிடித்துள்ள வாஷிங்டன் சுந்தர் ரூ. 3.20 கோடி

ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள சேலம் நடராஜன் ‘ ரூ. 40 லட்சம்

சிஎஸ்கே அணியில் இடம்பிடித்துள்ள  ஜெகதீசன்   ரூ. 20 லட்சம்

பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள முருகன் அஸ்வின் ரூ.20லட்சம்

கொல்கத்தாஅணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி ரூ. 4கோடி,

சென்னை அணியில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர்  ரூ. 20 லட்சம் என  அறிவிக்கப்பட்டு உள்ளது.