சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில், இந்தியா – இங்கிலாந்து இடையே நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட்டில், இந்தியா வெற்றிபெற 420 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 578 எடுத்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த அணியால் 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனாலும், முதல் இன்னிங்ஸில் 241 ரன்கள் முன்னிலைப் பெற்றதால் மொத்தமாக 419 ரன்கள் முன்னிலைக் கிடைத்துள்ளது.
2வது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் கேப்டன ஜோ ரூட் எடுத்த 40 ரன்களே அதிகபட்ச ரன்கள். இந்தியா சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் இஷாந்த் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். பிட்சி நிலைமை முற்றிலும் மாறியுள்ள சூழலில், இந்திய அணியின் சில சீனியர் வீரர்கள் பொறுப்பற்று ஆடிவரும் நிலையில், இந்திய அணி எப்படி வெல்லும் அல்லது டிரா செய்யும் என்ற கேள்வி எழுந்துள்ளது.