
அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்துள்ளது.
முதல் போட்டியில், இங்கிலாந்து வெற்றிபெற்ற நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பெளலிங் தேர்வுசெய்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்தின் ஜேஸன் ராய் 46 ரன்களை அடித்தார். மற்ற எந்த வீரரும் 30 ரன்களை தொடவில்லை என்றாலும், மூன்று பேர் 20+ ரன்களும், ஒருவர் 20 ரன்களும் அடித்தார். கூடுதல் ரன்களாக இந்திய பெளலர்கள் 16 ரன்களை வாரிக் கொடுத்தனர்.
இதனால், அந்த அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை சேர்த்துள்ளது.
இந்திய அணியில், இன்றையப் போட்டியிலும் ரோகித் ஷர்மா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]