பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் சாம்பியன் கோப்பையை வென்றது மும்பை அணி. இது, ஐஎஸ்எல் தொடரில் மும்பை அணி வெல்லும் முதல் கோப்பையாகும்.

மும்பை – கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியில், 2-1 என்ற கோல்கணக்கில் வென்றது மும்பை அணி.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. அதேசமயம், இரண்டாவது பாதியில் 90வது நிமிடத்தில் மும்பை அணியின் பார்தோலோமெவ் ஒரு கோலடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டுவந்தார்.

ஆனால், கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட கோலுக்கு, கொல்கத்தா அணியால் பதிலடி கொடுக்க முடியவில்லை. எனவே, ஆட்டநேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில், சாம்பியன் கோப்பையைத் முதன்முறையாக தட்டிச் சென்றது மும்பை அணி.

இதுவரை, மொத்தம் 3 முறை ஐஎஸ்எல் கால்பந்து கோப்பையை வென்ற கொல்கத்தா, இரண்டாமிடத்துடன் திருப்தியடைந்துகொள்ள வேண்டியதானது.