லண்டன்: இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி. ரிஷி சுனக் 4வது சுற்றிலும் முதலிடத்தை பிடித்துள்ளார்.  இதற்கிடையில், இங்கிலாந்து எம்.பி டேவிட் டேவிஸ் ரிஷி சுனக்கிற்கு எதிராக குற்றம் சாட்டி, கட்சி விசாரணை நடத்த வேண்டும் கோரிக்கை எழுப்பி உள்ளார்.  ரிஷி சுனக் தனது வாக்குகளை வெளியுறவுச் செயலர் லிஸ்ட்ரஸுக்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டி உள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி அரசு இல்லத்தில் கேளிக்கை விருந்து நடத்தியது மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி, அவரது அமைச்சரவை சகாக்கள் அடுத்தடுத்து தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து, போரிஸ் ஜான்சன் கடந்த 7ந்தேதி (ஜூலை) தனது கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் பிரதமா் பதவியையும் ராஜிநாமா செய்தாா்.

இதையடுத்து கட்சியின் புதிய தலைவரை பிரதமரை தேர்ந்தெடுப்பான நடவடிக்கைகளை கன்சர்வேடிவ் கட்சி முன்னெடுத்து வருகிறது. தொடக்கத்தில் 8 பேர் களத்தில் இருந்தனர்.  அவர்களுக்கு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு ஒவ்வொரு சுற்றிலும் கடைசியாக வந்தவர்கள்  போட்டியில் இருந்து விலக்கப்பட்டு வருகின்றனர்.

இறுதியாக 3 பேர் களத்தில் உள்ளனர்.  இந்திய வம்சாவளியைச் சோந்த முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் இருக்கிறார். அவருக்கு எதிராக,  வா்த்தகத் துறை அமைச்சராக இருந்த பென்னி மாா்டன்ட், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் டிரஸ் ஆகியோரும் களத்தில் உள்ளனர்.   ஏற்கெனவே 3 சுற்றுகளாக நடைபெற்ற வாக்குப் பதிவில் ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்திருந்தார். தொடர்ந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற 4-ஆவது சுற்று வாக்குப் பதிவிலும் ரிஷி சுனக் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார்.

ரிஷி சுனக்கை ஆதரித்து 118 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனா். அடுத்தபடியாக பென்னி மாா்டன்டுக்கு 92 எம்.பி.க்களும்,  லிஸ் டிரஸ்ஸுக்கு ஆதரவாக 86 வாக்களித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை / ஜூலை 20) நடைபெறும் 5-ஆவது சுற்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், 3வது வருபவர் விலக்கப்படுவார். அதைத்தொடர்ந்து 2 பேர் மட்டுமே களத்தில் இருப்பர். அவர்களில் ஒருவர் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், ரிஷி சுனக் மீது கட்சி விசாரணை நடத்த வேண்டும் என அவரது கட்சியைச் சேர்ந்த இங்கிலாந்து எம்.பி டேவிட் டேவிஸ் புகார் தெரிவித்துஉள்ளார். ரிஷி சுனக் தனது வாக்குகளை வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸுக்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டி உள்ளார். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.