
அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 44 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிவருகின்றனர். ஜோ ரூட் 14 ரன்களையும், ஸ்டோக்ஸ் 23 ரன்களையும் அடித்து களத்தில் நிற்கின்றனர்.
தற்போதைய நிலையில், இந்தியாவைவிட, இங்கிலாந்து அணி 11 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. இங்கிலாந்தை குறைந்தபட்சம் 120 ரன்களுக்கு இந்தியா சுருட்டினால்தான் வெற்றியைப் பற்றி யோசிக்க முடியும். ஏனெனில், தற்போது பிட்சின் நிலை அப்படித்தான் உள்ளது.
இந்தியா சார்பில், அக்ஸாருக்கு 3 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. அஸ்வினும் அக்ஸாரும் மட்டுமே மாறிமாறி வீசி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel