மும்பை:
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரோகித் சர்மா பங்கேற்பாரா? என்று இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் விளக்கம் அளித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்னும் 2 மருத்துவ சோதனைகளின் முடிவுகளை பொறுத்தே ரோகித் சர்மா விலகுவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா ஏற்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.