ங்கிலாந்தில் டிமென்ஷியா எனப்படும் முதியோருக்கான சிகிச்சையில் பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு வெடித்துள்ளது.
முதியவர்களைத் தாக்கும் ‘டிமென்ஷியா’ எனப்படும் மறதி நோய் ஆபத்தானது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் நினைவுத் திறனையும், பகுத்தறியும் திறனையும் இழக்கிறார்கள்.   அவர்களின் நடவடிக்கைகளை தங்களையும் அறியாமல் மாற்றிக் கொள்ளுகிறார்கள்.
old-age-depression
டிமென்ஷியாவுக்கு இன்னும் சரியான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களை மரணம் விரைவில் தழுவிக்கொள்ளுகிறது. எனவே டிமென்ஷியா பற்றிய விழிப்புணர்வு பல நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது,
 
இங்கிலாந்து நாடு பிரபல ஆங்கில நடிகை கேரி முல்லிகனை டிமென்ஷியா விழிப்புணர்வுக்கான அதிகாரபூர்வ தூதுவராக நியமித்து உள்ளது. கேரி மூலம்  பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
கேரியின் பாட்டி டிமென்ஷியவால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நோயின் தாக்கம் குடும்பத்தில் எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை அனுபவித்த பின்னரே தாம் இந்த சேவையில் மனமுவந்து ஈடுபடுவதாக கேரி தெரிவித்திருந்தார்.
Actress Carey Mulligan
இந்த நோயால் பாதிக்கப்படும்  முதியவர்களுக்கு இங்கிலாந்து அரசு மருத்துவ சேவை அளித்துவருகிறது. “டிமென்ஷியா நண்பர்கள்” எனப்படும் தன்னார்வத் தொண்டு அமைப்பை அரசே துவங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை அளித்து வருகிறது.
ஆனால் தற்போது இந்த மருத்துவச் சேவையில் பிராந்திய அடிப்படை யில் மோசமான பாகுபாடு காட்டப்படுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, இங்கிலாந்து அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலரான ஜெரேமி ஹண்ட் கூறுகையில், தரக் குறைவான மருத்துவ சேவை காணப்படும் இடங்கள் உடனே கண்டறியப்பட்டு விரைவில் குறைகள் களையப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.