சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம் ஜூன் 20ந்தேதி தொடங்குவதாக  அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். மேலும், அரசு கலைக் கல்லூரிகளுக்கு ஜூன் 27ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும்,  ஜூலை 25ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும்  என்றும் கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைன் மூலம் ஜூன் 20ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றார். மேலும்,  ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 19ஆம் தேதி வரை பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், ஜூன் 28 முதல் பி.இ., பி.டெக்., செமஸ்டர் தேர்வு ஜூலை 20 முதல் 31ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்கும் என்றார்.

அதுபோல, தமிழ்நாட்டில் உள்ள  அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூன் 27ஆம் தேதி முதல் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.