சென்னை:

பொறியியல் பட்டப்படிப்புக்கான விண்ணப்ப பதிவு நேற்று காலை தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே 15ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக உயர்கல்வி ஆணையம் தெரிவித்துஉள்ளது.

மிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள்  இணையதளம் மூலம்  விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று முதல் ஆன்லைன் விண்ணப்பதிவு தொடங்கியது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 15,000 மாணவ மாணவிகள் பொறியியல் படிப்புக்காக  விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த ஆண்டு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தும் பொறியியல்  கலந்தாய்வில் விண்ணப்பிக்க மே 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.

ஜூன் 17ம் தேதி கவுன்சலிங்கில் பங்கேற்க தகுதிபெற்ற மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

ஜூன் 20ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும் ஜூலை 3ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்குகிறது.

ஜூலை 30ம் தேதிக்குள் பொறியில் கல்ந்தாய்வுகள் முடிக்கப்பட்டு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

பொறியியல் விண்ணப்பம், கலந்தாய்வு உதவி, சான்றிதழ்கள் சரிபார்த்தல்  போன்றவைகளுக்கு இதற்காக தமிழகம் முழுவதும் 42  இடங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது பகுதியில் உள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் தமிழகம் முழுவதும் சேவை மையங்கள்  மூலமாக விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி

 www.tneaonline.in, www.tndte.gov.in

விண்ணப்பிக்கும் மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டுகள் மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் செலுத்தலாம்.

ஆன்லைனில் பணம் செலுத்த முடியாத விண்ணப்ப தாரர்கள் ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை’ என்ற பெயரில் வரைவோலையாக எடுத்து சேவை மையங்களில் அளிக்கலாம். விண்ணப்பத்தில் அருகில் உள்ள சேவை மையம் ஏதாவது ஒன்றை குறிப்பிட வேண்டும். ஏனெனில் அந்த சேவை மையத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.

விண்ணப்பிக்க மே 31-ந்தேதி கடைசி நாள் ஆகும்.