பெங்களூரு: நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் NEET வழியில் போகலாம். பொறியியல் கல்லூரிகளை ஆளும் தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்தியா கவுன்சில் (ஏஐசிடிஇ), JEE-மெயின் தேர்வை இளங்கலை BE படிப்புக்கான ஒற்றை நுழைவுத்தேர்வாக ஆக்குவது பற்றிச் சிந்தித்து வருகிறது.
தற்போது, உயர்நிலை கல்வியின் மத்திய குழு, ப்ரீமியர் ஐ.ஐ.டி.க்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மற்ற மத்திய அரசால் நிதியுதவி பெறும் நிறுவனங்களுக்குச் சேர்க்கைக்கான JEE-மெயின் தேர்வை நடத்துகிறது.
ஏஐசிடிஇ தலைவர் அனில் டி சஹஸ்ரபுத்தே செவ்வாய்க்கிழமை அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம், சில மாநிலங்கள் தற்போது மாநில கல்லூரிகளில் உள்ள பொறியியல் இடங்களை நிரப்ப JEE-மெயின் தேர்வை நுழைவுத் தேர்வாகப் பயன்படுத்தி வருவதாகக் கூறினார். ” JEE-மெயினை ஒற்றை நுழைவுத்தேர்வாக ஆக்க நாங்கள் திட்டமிடுகிறோம். JEE-மெயின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது மற்றும் பல்வேறு மாநிலங்கள் வெவ்வேறு பாடத்திட்டங்களைச் செயல்படுத்துகின்றன; ஆகையால் பொறியியலுக்காக ஒற்றை நுழைவுத்தேர்வை கொண்டு வருவது இன்னும் திட்டமிடும் நிலையிலேயே உள்ளது.”
மருத்துவ மாணவர் சேர்க்கையைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் மாணவர்கள் பல நுழைவுத் தேர்வுகளை எழுதுகின்றனர். கர்நாடக மாணவர்கள் குறைந்தது நான்கு நுழைவுத் தேர்வுகளாவது எழுதுகிறார்கள்- CET, ComedK, JEE, மற்றும் பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகள்.
உள்கட்டமைப்பு வசதிகள், குறைந்த மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமை ஆகிய பிரச்சனைகள் கொண்டுள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ குழு செல்வார்கள் என்று சஹஸ்ரபுத்தே கூறினார். குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், அத்தகைய கல்லூரிகள் இழுத்து மூடப்படும்.
“சில கல்லூரிகள் குறைந்த மாணவர் எண்ணிக்கையின் காரணமாக மூட வேண்டும் என்று எங்களை அணுகுகின்றனர்; இந்தச் செயல்முறையையும் நாங்கள் தளர்த்தியுள்ளோம். முன்னர் நாங்கள் அத்தகைய கல்லூரிகளை மூட ஒப்புதல் அளிக்க ரூ. 3 லட்சம் வாங்கினோம், இப்போது அது ரூ. 50,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் பிரகாரம், அங்கீகார தேசிய வாரியத்திடம் (என்பிஏ) அங்கீகாரம் பெறாத பொறியியல் கல்லூரிகளின் உட்கொள்ளும் திறன் அதிகரிக்கப்பட மாட்டாது, மற்றும் என்பிஏ அங்கீகாரம் கொண்ட பொறியியல் கல்லூரிகளின் உட்கொள்ளும் திறனை ஏ.ஐ.சி.டி.இ. அதிகரிக்கும், “என்று அவர் கூறினார்.
தற்போது, 15% கல்லூரிகள் என்பிஏ அங்கீகாரம் கொண்டுள்ளது.
உலகின் முதல் 100 நிறுவனங்கள் மத்தியில் ஒரு இந்திய பொறியியல் நிறுவனம் கூட இல்லாததால், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் 10 நல்ல தனியார் நிறுவனங்கள் மற்றும் 10 நல்ல அரசு நிறுவனங்களை அடையாளம் கண்டு, நிதி வழங்கி, உலகளவில் சிறந்த 100 நிறுவனங்களில் ஒன்றாக ஆக அம்சங்களை மேம்படுத்து சுதந்திரத்தை கொடுக்கும் என்று சஹஸ்ரபுத்தே கூறினார்.