சென்னை; திமுக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்த வீடு உள்பட சென்னை, மதுரை திண்டுக்கல் உள்பட  பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை சோதனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக அரசில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்து வருபவர்  அமைச்சர் ஐ.பெரியசாமி. இவர்து வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்களின் வீடுகளில்  இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன சென்னை, மதுரை, திண்டுக்கல் என அவருக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பணமோசடி வழக்கில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று  அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் துரைராஜ் நகரில் உள்ள வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அவரது மகனுமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் அதிகாலை முதல் தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது திமுகவினரிடையே  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.