சென்னை: தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான வீடு மற்றும் திமுக எம்.பி. கதிர்ஆனந்த் வீடு, அலுவலகங்கள், பள்ளி , கல்லுரிகளிள் உள்பட பல இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசின் மூத்த அமைச்சர் துரைமுருகன். இவர்மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. அதபோல அவரது மகனும் காட்பாடி தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் மீதும் புகார்கள் உள்ளன. சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி, துரைமுருகனின் வீடு மற்றும் அலுவலகங்கள், மற்றும் அவரது மகன் கதிர்ஆனந்திற்கு சொந்தமான பள்ளி, கல்லுரிகள் மற்றும், தோட்டங்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, சிமெண்ட் கிடங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடங்களில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பதுக்கி வைத்திருந்த ரூ.11.55 கோடியை பறிமுதல் செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், இன்று காலைமுதல் வேலூர், காட்பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதையொட்டி, அந்த பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட மத்திய போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
துரைமுருகன் வீடு அலுவலகம் மட்டுமின்றி, அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. பூஞ்சோலை சீனிவாசன் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே அமைச்சர் துரை முருகன் மகன் கதிர் ஆனந்த் மற்றும் வழக்கறிஞர்களுடனும், முதலமைச்சர் ஸ்டாலினுடனும், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன், “உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். எனக்கு யார் வந்திருக்காங்கன்னு தெரியவில்லை. எந்த துறை என எனக்கு எதுவும் தெரியவில்லை. யாரும் வீட்டில் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
திமுக எம்.பி கதிர் ஆனந்துக்கு அமலாக்கத்துறை சம்மன்….. அதிர்ச்சியில் அமைச்சர் துரைமுருகன்…