மும்பை: ‍யெஸ் வங்கியின் நிறுவனரும், அதன் முன்னாள் தலைமை நிர்வாகியுமான ராணா கபூரை கைது செய்துள்ளனர் அமலாக்கத் துறையினர்.

யெஸ் வங்கி விவகாரம் நாட்டை தற்போது பொருளாதார ரீதியாக உலுக்கி எடுத்து வருகிறது. வங்கிகளின் தங்களின் பணத்தைப் போட்டிருக்கு பொதுமக்கள் பலரும் மிரளத் தொடங்கி விட்டனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக ராணா கபூரின் இல்லத்தில், அமலாக்கத் துறையினர் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். அப்போது, யெஸ் வங்கியின் நிதிப் பரிவர்த்தனையில் முறைகேடு நடந்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் பண மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் கபூரின் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து, ராணா கபூரை மும்பை அலுவலகத்திற்கு அழைத்து வந்து 15 மணிநேரங்கள் வரை விசாரணை நடத்தினர். விசாரணையின் நிறைவில், ராணா கபூர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.