திருச்சி: திருச்சியில் உள்ள அமைச்சர் நேரு, அவரது தம்பி ராமஜெயம் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதையடுத்து அங்கு திமுகவினர் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை அமலாக்கத்துறையினர், அமைச்சர் கே.என்.நேருவின் மகனும், திமுக எம்.பி.யுமான அருண்நேரு வீடு மற்றும் அலுவலகங்களிலும், நேருவின் இளைய சகோதரரான கே.என்.ரவிச்சந்திரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் மற்றும், பங்குதாரர்களாக உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், கோவையில் டிவிஎச் கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும், கே.என்.நேருவின் மற்றோரு சகோதரர் மணிவண்ணனின், கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திருச்சியில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலகங்கள், அவரது மறைந்த சகோதரர் கே.என்.ராமஜெயம் மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
கேரளா மற்றும் மதுரையில் இருந்து வந்த அமைக்கத்துறை அதிகாரிகள் குழுவினர், திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அலுவலங்களிலும், அவரது மறைந்த சகோதரர் கே.என்.இராமஜெயம் தில்லை நகர் 10வது தெருவில் உள்ள நிலையில், அங்கும், மற்றும் நேருவின்சகோதரி,. அவர்களின் குடும்பத்தினர் வீடுகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் திருச்சியில் உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த திமுகவினர் அந்த பகுதியில் குவிந்து வருகின்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் சூழலில் திமுக மூத்த அமைச்சர், அவரது மகன், சகோதரர், சகோதரி வீடுகள், தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையின் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி சோதனை கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே திமுக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, துரை முருகன், பொன்முடி எனப் பலரும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை ரெய்டுகளை சந்தித்துவிட்ட நிலையில் மற்றொரு மூத்த அமைச்சர் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை….