சென்னை

சென்னை திருவேற்காடு கருமாரியம்மன் ஆலய சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகல் அகற்றபட்டுள்ளன.

சென்னையை அடுத்துள்ள திருவேற்காட்டில் புகழ் பெற்ற கருமாரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.  தினசரி இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கல் வருவது வழக்கம்,  அதிலும் விடுமுறை மற்றும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு கூட்டம் அலைமோதும்’.

இந்த கருமாரியம்மன் ஆலயமத்துக்கு செல்லும்சாலையின் இரு பக்கங்களிலும் ஏராளமனோர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.  இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு மிக்வும் இடைஞ்சல் உண்டானது.  எனவே பக்தர்கள் இது குறித்து திருவேற்காடு நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.

திருவேற்காடு நகராட்சி நிர்வாகம் பக்தர்களின் புகாரை ஏற்று கருமாரியம்மன் கோவில்க்கு செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவ்டிக்கை எடுத்துள்ளது.  அதன்படி திருவேற்காஉ தேரசி சாலையில் இருந்து கோளடி வரையுள்ள ஒரு கிலோ மீட்டர் தூர சாலையின் இருபக்கங்களலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபடுகின்றன.

[youtube-feed feed=1]