நேபாள அரசு கடந்த ஜூலை 2015ல் புதிய திட்டத்தின் அறிமுகப்படுத்தியது. இதன்படி நேபாள குடிமக்களை அயல் நாட்டில் வேலைக்கு எடுக்கும் நிறுவனங்களே தொழிலாளர்களின் விசா மற்றும் விமானப் பயண டிக்கெட் செலவினை ஏற்க வேண்டும்.

இந்த அறிவிப்பு, மலேசியா, குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரெட்ஸ், கத்தார், ஓமன் உள்ளிட்ட ஏழு எண்ணை நாடுகளுக்குப் பொருந்தும்.

இந்த ஏழு நாடுகளில் சுமார் 2.50 மில்லியன் நேபாளிகள் வேலைக்காக இடம் பெயர்ந்துள்ளனர். இது மொத்த இடம்பெயரும் நேபாளிகளில்  95% சதம் ஆகும் (இந்தியா தவிர).

பொதுவாய் வெளிநாடு வேலை கிடைத்து செல்லும் நேபாளிகள் , 70000 நேபாள ரூபாயை செலவு செய்வார்கள். பெரும் கடனுடனே தங்களின் வெளிநாட்டுப் பயணத்தை தொடங்குவர்.

இந்தத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியதன் மூலம், நேபாள அரசு, இடம்பெயரும் நேபாளிகளின் 80% செலவினைக் குறைத்து அவர்கள் குடும்பம் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவதைத் தடுத்துள்ளது.
இந்தத் திட்டத்தினை கைவிடக் கோரி நேபாள நாட்டின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு ஏஜென்ட்கள்  நேபாள அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அவர்கள் இந்தத் திட்டத்தினை கைவிடுவதோடு அல்லாமல், சேவைக் கட்டணத்தையும் உயர்த்திக் கொள்ள அனுமதிக்குமாறு வற்புறுத்தி வருகின்றனர்.
இந்தத்  திட்டத்தின் பயனை உணர்ந்த பல்வேறு தொழிலாளர் அமைப்புகள், அரசு இந்த திட்டத்தில் இருந்து பின் வாங்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 06_தேதி, 23 தொழிலாளர் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள் பிரதமர் அலுவலகத்தில் மனு ஒன்றினைத் சமர்ப்பித்தனர். அதில், எக்காரணம் கொண்டும், இந்த இலவச விசா மற்றும் டிக்கெட் திட்டத்தினை கைவிடக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

NEPAL VISA TICKET
முக்கிய தொழிலாளர் சங்கமான “கட்டிட மற்றும் மரத் தொழிலாலர்கள் சர்வதேச சம்மேளனம் ” ஆதரவு தெரிவித்துள்ளது.