கொழும்பு

லங்கையில் மார்ச் மாதம் ஆறாம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலைச் சட்டம் இன்று விலக்கிக் கொள்ளப்படுவதாக அதிரிபர் சிரிசேனா அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள கண்டியில் புத்த மதத்தினருக்கும் இஸ்லாமியருக்கும் இடையில் மதக் கலவரம் ஏற்பட்டது தெரிந்ததே.    அந்த கலவரத்தில்  இருவர் கொல்லப்பட்டனர்.   மேலும் நூற்றுகணக்கான இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.    இருபதுக்கும் மேற்பட்ட மசூதிகள் இடிக்கப்பட்டன.  இதனால் இலங்கையில் கடும் பதட்டம் உண்டானது.

அதையொட்டி இந்த மாதம் ஆறாம் தேதி. இலங்கை அரசு அவசரநிலை சட்டம் அறிவித்தது.    இன்று அந்த அவசரநிலை சட்டம் நீக்கப்படுவதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிரிசேனா அறிவித்துள்ளார்.   அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “மக்களின் பாதுகாப்புக்காக அவசர நிலை சட்டம் அறிவிக்கப்பட்டது.  தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால் இந்த அவசர நிலை சட்டம் நேற்றி நள்ளிரவு முதல் விலக்கிக் கொள்ளப்படுகிறது”  என பதிந்துள்ளார்