டில்லி:

ர்செல் மேக்சிஸ் வழக்கின் நேற்றைய விசாரணையின்போதும், அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்கை ஒத்தி வைக்க கோரியதால், கோபமடைந்த நிதிபதி, இது தனக்கு அவமானமாக இருக்கிறது என்று  இரு அமைப்புகளையும் கடுமையாக சாடிய நிலையில், செப்டம்பர் 3ந்தேதி வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்தார்.

அதுவரை சிதம்பரம், மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் பெற்றுள்ள நிலையில், சிதம்பரம் சிபிஐ காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில், அவர்கள் மீதான ஏர்செல் மேக்சிஸ் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, ப.சிதம்பரத்துக்கு எதிராக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால், எர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனால் கோபமடைந்த சிறப்பு நீதிபதி ஓ.பி.சயினி, வழக்கை ஒத்தி வைக்க மறுப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிபிஐ தரப்பில் மீண்டும் கோரப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஐ பார்த்து காட்டமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

அப்போது, “வழக்கை ஏன் ஒத்திவைக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூறியவர், வழக்கின் விசாரணை ஒவ்வொரு முறையும் நீங்கள் அதைத்தான் நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். கடந்த ஒரு வருடம் உங்களின் வாதம் அதுவாக மட்டுமே இருந்து வந்துள்ளது…. இது எனக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது…. என்று கூறியவர், செப்டம்பர் 3 ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்” என்று உத்தரவிட்டார்.

அதுவரை சிதம்பரத்தை ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கைது செய்யக் கூடாது என்றும்  உத்தர விட்டார்.

நீதிபதியின் கோபம் சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகளை அச்சமடைய செய்துள்ளது.