சென்னை: சென்னை உள்பட 18 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒருதலைக்காதலால், காதலனை சிக்க வைக்கும் வகையில், போலி மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமான நிலையங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது.

சென்னை விமான நிலையம் உள்பட 18 விமான நிலையங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான மின்னஞ்சல் ஜுன் 28ந்தேதி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மெயிலில், சென்னை உள்நாட்டு விமான நிலையம், சா்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவில் உள்ள 18 விமான நிலையங்களில் சக்தி வாய்ந்த திரவ நிலையிலான வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும், அவை வெடித்துச் சிதறும் என்பதால் விமானங்கள், பயணிகள், விமான நிலையத்தைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஆய்வு செய்த சைபர் கிரைம் போலீசார், அது வெளிநாட்டிலிருந்து, போலியான முகவரி மூலம் அனுப்பப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் உயா் அதிகாரிகளின் அவசர பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும், விமான நிலைய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிரமாகக் கண்காணித்து, சோதனை நடத்தினா்.
இருப்பினும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. எனவே, வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்று தெரியவந்தது. இதுகுறித்து சென்னை விமான நிலைய உயா் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சென்னை மாநகர சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் உதவியுடன், விசாரணை நடத்தி வருகின்றனா்.
பள்ளிகளுக்கு இமெயில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுத்த சென்னையைச் சேர்ந்த பெண் ஐ.டி. ஊழியர் கைது!