தர்மபுரி:
மாவட்ட கலெக்டர் முன் துப்பாக்கியை நீட்டிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 26ந் தேதி தர்மபுரி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் மாவட்ட கலெக்டர் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டார்கள். தங்களது குறைகளைச் சொல்ல ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தார்கள்.
அந்த கூட்டத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனும் வந்திருந்தார். திடீரென தனது இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து கலெக்டர் முன் நீட்டினார். பதறிப்போன கலெக்டரும், மற்றவர்களும் துப்பாக்கியை உள்ளே வைக்கச் சொன்னார்கள்.
அதை காதில் வாங்காத முல்லை வேந்தன், துப்பாக்கியை நீட்டியபடியே, தனது துப்பாக்கிக்கு லைசன்ஸ் புதுப்பித்து தரப்படவில்லை என்று புகார் கூறினார்.
முல்லை வேந்தன் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பொது இடத்தில் அரசாங்க நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டும் வகையில் துப்பாக்கியை காட்டியதற்கு முல்லைவேந்தன் மீது தர்மபுரி இன்ஸ்பெக்டர் காந்தி வழக்கு பதிவு செய்துள்ளார்.