டிவிட்டர் சமுக வலைதளத்தை முழுமையாக கைப்பற்றிய எலன் மஸ்க் ‘The Bird is freed’ என பரபரப்பு டிவிட் பதிவிட்டுள்ளார்.
உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் நுழைந்து உலகின் மிகப்பெரிய பணக்காரராக உயர்ந்தவர் எலன்மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் என்ற பெயரில் விண்வெளி ஆய்வு நிறுவனத்தை நடத்தி உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் விண்கலங்களை ஏவி சாதனை படைத்து வருகிறார். அதுபோல, டெஸ்லா என்ற பெயரில் மின்சார காரர்களை தயாரித்து உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறார். ஏற்கனவே எலான் மஸ்க் கையில் 5 பெரு நிறுவனங்கள் வெவ்வேறு துறையில் இயங்கி வரும் நிலையில் தற்போது டிவிட்டர் இணையதளத்தை வாங்கி உள்ளார்.
ஏற்கனவே மக்களுக்குச் சுதந்திரமாகப் பேச வாய்ப்பையும், அதற்கான தளத்தையும் உருவாக்க வேண்டும் என கூறி வந்த எலான் மஸ்க் பெரும் தடுமாற்றத்திற்கு மாதங்களுக்கு டிவிட்டர்-ஐ கைப்பற்ற விரும்புவதாக அறிவித்தார். பின்னர் அதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இடையில், டிவிட்டர் வாக்குவதில் எலன் மஸ்க் ஆர்வம் காட்டவில்லை என்று தகவல் வெளியானது. ஆனால், இதுதொடர்பான வழக்கில், அக்டோபர் 28 அதாவது வெள்ளிக்கிழமைக்குள் எலன் மஸ்க் ஏற்கனவே போட்ட ஒப்பந்தப்படி, டிவிட்டரை கைப்பற்றியாக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து எலன்மஸ்ட் தனது டெட்லைன் நாளுக்கு ஒருநாள் மன்னதாகவே டிவிட்டரை கைப்பற்றி உள்ளார். இதைடுத்து, 2 இந்திய அதிகாரிகள் உள்பட 3 பேரை பதவி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய செய்தி உறுதியான அடுத்த நிமிடம் டிவிட்டர் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகள் இந்நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், எலன் மஸ்க் தனது டிவிட்டர் பக்க்ததில், The Bird is freed என பதிவிட்டுள்ளார். ஏற்கனவே எலன் மஸ்க் டிவிட்டர் சமுக வளைதளத்தை வாங்க முன்வந்தபோது, பேச்சு சுதந்திரம் தான் இப்போது மிக முக்கியமான யோசனை என தெரிவித்திருந்த நிலையில், தற்போது, டிவிட்டர் ஒரு சுதந்திரப் பறவை என டிவிட் பதிவிட்டுள்ளார்.
டிவிட்டரை எலன் மஸ்க் கைப்பற்றியதும், இந்தியரான டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை நிதியியல் அதிகாரி Ned Sega, சட்டக் கொள்கை, நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் விஜயா காடே ஆகியோர் டிவிட்டர் நிறுவன பணியில் இருந்து வெளியேறினர். ஏற்கனவே எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றினால் 75 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனச் செய்தி வெளியான நிலையில் எலான் மஸ்க் நேரடியாக அலுவலகம் வந்து 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என உறுதி அளித்தார்.
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட 3 பேரில் 2 இந்தியர்கள் என்பது இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா கார் விவகாரத்தில் மத்தியஅரசுக்கும், எலன் மஸ்க்குக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், டிவிட்டருக்கு முழு சுதந்திரம் அளித்திருப்பது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.