அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் தனது முதல் அமைச்சரவை கூட்டத்தை நேற்று கூட்டினார்.
இந்த கூட்டத்தில் DOGE துறையின் தலைவர் எலன் மஸ்க்-கும் கலந்துகொண்டார்.
‘தாழ்மையான தொழில்நுட்ப ஆதரவாளன்’ என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட மஸ்க், “அமெரிக்க அரசின் சிஸ்டம் சரியில்லை, அவை மிகவும் பழமையானவை இதில் பல செயலிழந்துள்ளது.

அமைப்புகளில் நிறைய தவறுகள் உள்ளன. மென்பொருள் வேலை செய்யாது. அரசாங்க கணினி அமைப்புகளை சரிசெய்ய DOGE உதவுகிறது.
இருந்தபோதும் உண்மையில் இது தொழில்நுட்ப ஆதரவா என்பது முரண்பாடாக உள்ளது” என்று மஸ்க் கூறினார்.
DOGE-க்கு தலைமை தாங்கும் மஸ்க், டிரம்ப் நிர்வாகத்தில் தனது பங்களிப்புகளைப் பற்றிப் பேசினார்.
அமெரிக்கத் துறையின் தீவிரமான செலவுக் குறைப்பு முயற்சிகள் ‘மிகப்பெரிய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை’ நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அவர் விளக்கினார்.
.
“நாம் இதைச் செய்யாவிட்டால், அமெரிக்கா திவாலாகிவிடும்… ஒரு நாடாக, $2 டிரில்லியன் பற்றாக்குறையை நம்மால் சந்திக்க முடியாது,” என்று மஸ்க் கூறினார், மேலும் மத்திய அரசாங்கத்தையும் அதன் செலவினங்களையும் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எழும் விமர்சனங்களைப் பற்றியும் கூறினார்.
அரசாங்க செயல்திறன் துறையின் (DOGE) தனது குழு ‘நிறைய கொலை மிரட்டல்கள்’ மற்றும் எதிர்வினைகளைப் பெற்று வருவதாக வெளிப்படுத்தினார்.
இந்த கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், DOGE தலைவர் மஸ்க்-கைப் பாராட்டியதோடு, “உங்களைப் பெற்றிருப்பது ஒரு மரியாதை.
மஸ்க்-கிற்கு நிறைய தொழில்கள் உள்ளன, அவர் மிகவும் வெற்றிகரமான மனிதர். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். அவர் நிறைய தியாகம் செய்து நிறைய பாராட்டுகளைப் பெறுகிறார்.
ஆனால் அவர் மீதான தாக்குதல் மற்றும் விமர்சனங்களால் பாதிக்கப்படுகிறார். நான் உங்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். இது எதிர்பார்த்தது தான் அது அப்படித்தான் செயல்படும்” என்று டிரம்ப் கூறினார்.