வாஷிங்டன்

பிரபல தொழிலதிபரும் உலக செல்வந்தர்களில் ஒருவருமான எலான் மஸ்க் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.

.

டெஸ்லோ, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றி அதனை ‘எக்ஸ்’ என பெயர் மாற்றம் செய்திருந்தார். அதில் பல முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அந்த செயலியில் அவர் செய்த மாற்றங்கள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

எலன் மாஸ்க் தென்னாப்பிரிக்காவில் சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து எப்படி உலக பணக்காரர் ஆனார் என்பதை பிரபல அமெரிக்க எழுத்தாளர் வால்டர் ஐசக்சன் புத்தகமாக எழுதி இருந்தார். அந்தப் புத்தகத்தில் அவரது சிறுவயது முதல் நடந்த முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது. உலகெங்கும் அந்த புத்தகம் பலரின் கவனத்தைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.

இந்த புத்தகத்தை மையமாக வைத்து எலான் மஸ்க் வாழ்க்கை திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கத் திரைப்பட இயக்குநரான டேரன் அரோனோபிஸ்கி இத்திரைப்படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே இவர் தி வேல், மதர், பை (Pi) உள்ளிட்ட பிரபல திரைப்படங்களை இயக்கியுள்ளார். திரைப்படத்தினை ஏ24 என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.