திருவனந்தபுரம்
மரணம் அடைந்த யானை சாப்பிட்டது அன்னாசி இல்லை எனவும் தேங்காய் எனவும் கைது செய்யப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவில் மலப்புரம் பகுதியில் சுற்றுத் திரிந்த ஒரு கர்ப்பிணி யானை பட்டாசு நிரப்பிய அன்னாசிப்பழத்தை சாப்பிட்டதால் வாயில் வெடித்து புண்ணானது. இதையொட்டி அந்த யானை எதுவும் சாப்பிடாமல் வலியால் துன்பப்பட்டது அந்த யானை அங்கிருந்த நதியில் சென்று நின்றபடி தனது உயிரை விட்டது.
இதையொட்டி இருவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. முதலில் இந்த யானைக்கு அன்னாசிப்பழத்தைக் கொடுத்து கொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வந்தன. அதன் பிறகு அந்த யானை தானே அந்த அன்னாசிப்பழத்தை சாப்பிட்டதாக வேறு தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்த வாக்குமூலத்தில், யானை சாப்பிட்டது அன்னாசி பழம் இல்லை எனவும் காட்டுப் பன்றிகளை விரட்ட பட்டாசு வைத்திருந்த தேங்காயை அந்த யானை சாப்பிட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
[youtube-feed feed=1]