சென்னை

ரும் எட்டாம் தேதி அன்று வங்கக் கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவாக உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வரும் 8 ஆம் தேதி அன்று புதிய காற்றழுத்த பகுதி உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த காற்றழுத்த பகுதி தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் என அற்விக்கபட்டுள்ளது.

இதனால் தென் கிழக்கு வங்கக் கடலுக்கு  மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

இந்த காற்றழுத்த பகுதியால் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.